கமல்ஹாசன் பாஜகவுடன் கைகோர்த்தால் கட்டாயம் வரவேற்போம்: தமிழிசை கருத்து

நடிகர் கமல்ஹாசன் எங்களுடன் கைகோர்த்தால் கட்டாயம் வரவேற்போம் என தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பா.ஜ.கவின் ஆதிதிராவிடர் அணி சார்பில் நடந்த கூட்டத்திற்கு அந்த அணியின் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு கமல் மட்டும் அல்ல, யார் தங்களுடன் கைகோர்த்தாலும் பா.ஜ.க. வரவேற்கும் என்றார்.

 

source : cauverynews.tv

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *