Category: Tamil

ஞாநியின் உடல்தானம் போற்றுதலுக்குரியது: கமல் இரங்கல் ட்வீட்

“ஞாநியின் உடல்தானம் போற்றுதலுக்குரியது. அவர் தானத்துக்கு அனுமதித்த குடும்பத்தாரை வணங்குகிறேன்” என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், நாசர் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அரசியல் தலைவர்கள் நல்லகண்ணு, முத்தரசன், திருமாவளவன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இலக்கியவாதிகளும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று மதியம் 3 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் ட்வீட் ஒன்று பதிவு

கமல் ஹாசன் அவர்கள் ஜனவரி 18 ம் தேதி தனது திட்டத்தை வெளியிட இருப்பதாக அறிவித்தார்.

உலக நாயகன் கமல் ஹாசன் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அரசியல் வருகையை பற்றி ஊகிக்கப்படுகிறது. நேற்று கமல் ஹாசன் தனது திட்டத்தை பற்றியும் துவங்கும் தேதியை தகவலை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். விருது வழங்கும் விழாவில் பேசுகையில், பிரபல நடிகர் கமல் ஹாசன் ஜனவரி 18 ம் தேதி தனது திட்டத்தை வெளிப்படுத்த இருப்பதாக அறிவித்தார். விருது விழாவில் பேசிய கமல் ஹாசன் ஜனவரி 26 ம் தேதி குடியரசு தின விழாவில் இருந்து தமிழகத்தை சுற்று பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார். முன்னதாக,உலக நாயகன் கமல் ஹாசன் தனது பிறந்தநாள் அன்று  தனது அரசியல் வருகையை முறையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஊகங்களை

வல்லாரை வஸ்துக்களை உட்கொண்டாவது அரசியல் நிகழ்வுகளை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் : கமல்ஹாசன்

அரசியல் கட்சியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பயம் காரணமல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வல்லாரை வஸ்துக்களை உட்கொண்டாவது அரசியல் நிகழ்வுகளை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஆனந்த விகடன் இதழில் கமல்ஹாசன் எழுதியுள்ள கட்டுரையில், வழக்கமான பாரம்பரியத்தில் வரும் அரசியல்வாதியாகத் தொடர தனக்கு விருப்பம் இல்லை என்றும், அப்படி ஒரு தலைமையின் கீழ் தொடர இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை‌ என குறிப்பிட்டுள்ளார். அரசியல் பயணத்திற்கு நான் தாமதப்படுத்துவது சந்தேகத்தினாலோ, பயத்தினாலோ அல்ல என்றும் சிரத்தையினால் தான் என்றும் கமல் கூறியுள்ளார். கடலே ஆர்ப்பரித்தாலும் பாம்பன் பாலம் நிலைத்து நிற்கிறதல்லவா? அது மாதிரி

கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் பேச்சு

பிட்சா, பர்க்கர், மற்றும் குளிர்பானங்களை பயன்படுத்தக் கூடாது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கோவையின் பெருமை, புகழ், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றும் வகையில் கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து 10 ஆவது ஆண்டாக ‘கோவை விழா’ என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்நிகழ்ச்சி வருகிற 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . ‘கோவை விழா’வின் ஒரு பகுதியாக தனியார் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள, பள்ளிகளில் குழந்தை உடல் பருமன் தடுப்பு திட்ட துவக்க விழா வ.உ.சி.மைதானத்தில் துவங்கியது. இந்தத் திட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்கள் மத்தியில்

ரசிகர்களுக்கு கமல்ஹாசன் திடீர் எச்சரிக்கை

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டரில் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன. கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன. — Kamal Haasan (@ikamalhaasan) 7

ஆர்.கே.நகரில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது: கமல்ஹாசன் கடும் விமர்சனம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பது சோகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கமல் விமர்சித்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடப்பு விவகாரங்கள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த கமல், மீண்டும் அரசியல் தொடர்பான விமர்சனங்களை

தீர்வு காணப்படாத கமல் பார்வையிட்ட எண்ணூர் கழிமுக அபாயம்... நீரில் இறங்கி மக்கள் மனிதசங்கிலி!

சென்னை : சென்னை எண்ணூரில் ஆறு என்ற ஒன்றே இல்லை என்று மோசடியாகத் தயாரிக்கப்பட்டுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தைத் திரும்பப் பெறக்கோரி அந்தப் பகுதி மக்கள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணூர் உப்பங்கழியின் 6500 ஏக்கர் நீர் ஆதார நிலங்களை தொழிற்துறை ரியல் எஸ்டேட்டாக மாற்றுவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய மோசடி இது என்று கூறி எண்ணூர் உப்பங்கழி மற்றும் கொற்றலை ஆற்றை காப்பாற்றுவதற்காக மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் இந்நிலையில் நீர் நிலைகளை பாதுகாக்க மறுக்கும் அரசை கண்டித்து வடசென்னை அனல்மின்நிலையம் அருகே மீனவர்கள் படகுகளில்

ஹார்வர்டு பல்கலை., கருத்தரங்கில் கமல் உரை!

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழக கருத்தரங்கில் நடிகர் கமல் பேசப்போகிறார். உலக அளவில் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம். இங்கு ஆண்டுதோறும் இந்திய கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. 15வது ஆண்டாக நடைபெற இருக்கும் கருத்தரங்கம் பிப்ரவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடக்கிறது. இதில் பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சருமான சுரேஷ் பிரபு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதல்வருமான அமரீந்தர் சிங் ஆகியோருடன் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சி, சவால்கள் ஆகியவை பற்றி இந்நிகழ்வில் பேசப்படும். தொடர்ந்து பார்வையாளர்களுடன் உரையாடல் நடக்கும். source : samayam.com

கமல் - ஷங்கருடன் இணையும் அனிருத்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும், ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இயக்குனர் ஷஙகர் ‘2.0’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கமலை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது ‘2.0’ இறுதிகட்ட பணிகளில் தீவிரம்காட்டும் ஷங்கர், அதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தின் முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார். இதனிடையே, ‘இந்தியன் 2’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டாலும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. முன்னதாக ‘ரெமோ’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷங்கர் “விரைவில் அனிருத்தோடு பணிபுரிவேன்”

ராகுல் காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87 ஆவது தலைவராக ராகுல்காந்தி இன்று முறைப்படி பதவி ஏற்றார். நேரு குடும்பத்தின் 6 ஆவது தலைவராக பதவியேற்றுள்ள அவருக்கு சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் காங்கிரஸை தவிர்த்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், வாழ்த்துகள். உங்களை பற்றி உங்கள் பதவி தீர்மானிக்காது. ஆனால் நீங்கள் உங்கள் பதவியை வரையறுக்கலாம். உங்கள் குடும்ப முன்னோர்களை