Category: Tamil

குமரி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்: கமல்

கன மழையால் மிகவும் பாதிப்புக்குள்ளான குமரி மாவட்டத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். தென்மேற்கு வங்கக் கடலில் தூத்துக்குடி அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறி லட்சத்தீவு நோக்கி நகர்ந்து வருகிறது. ஒக்கி என இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் புயல்

'கோவிலை கொள்ளையடிப்பவர்களைத் தாக்கத் தயார்...'! யாரை குறிப்பிடுகிறார் கமல்ஹாசன்?

நம்பியர்கள் கைவிடப்பட்டது மக்கள் நம்பும் ஆண்டவனின் செயல் அல்ல, மக்களை ஆளும் ஆட்சியாளர்களின் செயல் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களையும், அரசின் குறைகளையும் தெரிவித்து வருகிறார். அத்துடன் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், அதை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது பிறந்தநாளான கடந்த 7ஆம் தேதி அன்று மையம் விசில் என்ற செயலியை மக்கள் கருத்துக்களை பெறுவதற்கு தொடங்கியுள்ளார். அவரது இந்த ட்விட்டர் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளால் அதிமுகவினருக்கும், அவருக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கமல் ட்விட்டில் ஆதாரம்

கமல்ஹாசன் பாஜகவுடன் கைகோர்த்தால் கட்டாயம் வரவேற்போம்: தமிழிசை கருத்து

நடிகர் கமல்ஹாசன் எங்களுடன் கைகோர்த்தால் கட்டாயம் வரவேற்போம் என தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பா.ஜ.கவின் ஆதிதிராவிடர் அணி சார்பில் நடந்த கூட்டத்திற்கு அந்த அணியின் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு கமல் மட்டும் அல்ல, யார் தங்களுடன் கைகோர்த்தாலும் பா.ஜ.க. வரவேற்கும் என்றார்.   source : cauverynews.tv

அரசியலில் எந்த கட்சியும் தீண்டத்தகாதது இல்லை... மக்கள் நலன் கருதி கூட்டணி: கமல்ஹாசன்

தமது கட்சியின் பெயர், கொள்கைகளை விரைவில் வெளியிடுவேன்; அரசியலில் தீண்டத்தகாதவர் யாரும் இல்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் நேற்று பேசியதாவது: விரைவில் என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் வெளியிடுவேன். சித்தாந்தங்களின் அடிப்படையின் பாஜக மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் மக்களுக்கு எது தேவையோ அதுவே என்னுடைய தேவை. ஆகையால் தமிழகத்தின் நலன் கருதி வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. எனக்கு அரசியலுக்கு வருகின்றன தைரியம் இருக்கிறது. எனக்கு எந்த ஒரு பயமும் இல்லை. தமிழக அரசியலில் நான் என்னை முன்னிறுத்தவில்லை. அதற்கு

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ ஷூட்டிங் தொடங்கியது

கமல்ஹாசன் நடித்து, இயக்கிவரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஷூட்டிங் மறுபடியும் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் இயக்கத்தில், கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா நடிப்பில் 2013ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘விஸ்வரூபம்’. முதல் பாகத்தை இயக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளையும் சேர்த்து ஷூட் செய்து வைத்திருந்தார் கமல்ஹாசன். எனவே, உடனடியாக இரண்டாம் பாகம் தயாரானது. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால், படம் பாதியிலேயே நின்றது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கமல்ஹாசன், ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து ‘விஸ்வரூபம் 2’ படத்தை வாங்கி போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை ஆரம்பித்தார். அப்போதுதான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் கமல்ஹாசன்

சசிகலாவின் சொகுசு வசதிகளை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபா – கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

பெங்களூரு சிறையில் சசிகலாவின் சொகுசு வசதிகளை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி ரூபா, நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார். சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். சிறையில் சசிகலா சுதந்திரமாக நடமாடுகிறார் என்றும் கைதி உடை அணியவில்லை என்றும் சமையல் செய்து சாப்பிட அறை ஒதுக்கி கொடுத்து இருப்பதாகவும் அம்பலப்படுத்தினார். இச்சம்பவம் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது

விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன்:  கமல்ஹாசன்

கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ் நவ்க்கு அளித்தப் பேட்டியில் இந்திய அளவிலான அரசியல் குறித்த தமது கருத்தை முன்வைத்து கமல் பேசினார். தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் அரசியலில் தாம் ஒரு கூர்மையான கருவியாக மாறுவதற்கு முயன்று வருவதாக அப்போது அவர் குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் ஊழல் புரையோடி போயிருப்பதாகவும், அதை ஒழிக்க அனைவரும் ஒன்றுசேர வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் அழைப்பு விடுத்தார். நாட்டின் எதிர்காலம் குறித்து அனைவரும் கனவு மட்டுமே காண்பதாகவும், அதை செயல்படுத்துவதற்கு யாரும் நேரம்

மக்கள் உயிரை மதியாத அரசு; விரைவில் பல்லக்கில் இருந்து வீழ்த்தப்படும்; கோபத்துடன் கமல்!

சென்னை: மக்கள் உயிர்களைப் பற்றி கவலைப்படாமல், புகழுக்காக ஏங்கி செயல்படும் அரசு விரைவில் வீழ்த்தப்படும் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில், வரும் டிசம்பர் 3ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளுங்கட்சியினர் செயல்பட்டுள்ளனர். அதாவது உயிருள்ள அரசியல்வாதிகள் படத்துடன் வ.உ.சி பூங்கா முதல், விமான நிலையம் வரை தொடர்ச்சியாக கட் அவுட், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரங்கசாமி கவுண்டன் புதூரைச் சேர்ந்த ரகுபதி, சிங்கா நல்லூர் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அலங்கார வளைவு மோதி, ரகு கீழே விழுந்தார்.

கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க நடவடிக்கை அவசியம்: கமல் ட்வீட்

கந்துவட்டிக் கொடுமையை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர்கள் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அசோக்குமாரின் அகால மரணம்போல் இனி நிகழவிடக்கூடாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அசோக்குமாரின் குடும்பத்ததனருக்கும், நண்பர்களுக்கும் தனது இரங்கலையும் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். கந்துவட்டி தொடர்பாக கமல்ஹாசன் ஏன் ட்விட்டர் செய்தி எதுவும் வெளியிடவில்லை என தமிழிசை சவுந்திரராஜன் நேற்று மறைமுகமாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று இந்த செய்தியை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். வீடியோ

பாரதியாரின் தோற்றத்தில் முதல் ஊழல் ஆதாரம் வெளியிட்ட கமல்

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தீவிரமான அரசியல் கருத்துக்களை டுவிட்டர் மூலம் கூறிவருகிறார். அரசியல் கட்சி தொடங்குவதிலும் மும்முரமாக இருக்கிறார். ஆளும் கட்சியின் ஊழலையும், மத்திய அரசின் முடிவுகளையும் கடுமையாக எதிர்த்து எழுதி வருகிறார். மாநில அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மாநில அமைச்சர்கள். “கமல் பொதுப்படையாக ஊழல் குற்றச்சாட்டு சொல்லக்கூடாது. ஊழல் நடந்திருந்தால் அதை ஆதாரத்துடன் வெளியிட்டு குற்றம் சாட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்கள். இந்த நிலையில் நேற்று கமல் தனது டுவிட்டர் மூலம் முதல் ஊழல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். தன்னை