Category: Tamil

கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க நடவடிக்கை அவசியம்: கமல் ட்வீட்

கந்துவட்டிக் கொடுமையை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர்கள் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அசோக்குமாரின் அகால மரணம்போல் இனி நிகழவிடக்கூடாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அசோக்குமாரின் குடும்பத்ததனருக்கும், நண்பர்களுக்கும் தனது இரங்கலையும் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். கந்துவட்டி தொடர்பாக கமல்ஹாசன் ஏன் ட்விட்டர் செய்தி எதுவும் வெளியிடவில்லை என தமிழிசை சவுந்திரராஜன் நேற்று மறைமுகமாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று இந்த செய்தியை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். வீடியோ

பாரதியாரின் தோற்றத்தில் முதல் ஊழல் ஆதாரம் வெளியிட்ட கமல்

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தீவிரமான அரசியல் கருத்துக்களை டுவிட்டர் மூலம் கூறிவருகிறார். அரசியல் கட்சி தொடங்குவதிலும் மும்முரமாக இருக்கிறார். ஆளும் கட்சியின் ஊழலையும், மத்திய அரசின் முடிவுகளையும் கடுமையாக எதிர்த்து எழுதி வருகிறார். மாநில அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மாநில அமைச்சர்கள். “கமல் பொதுப்படையாக ஊழல் குற்றச்சாட்டு சொல்லக்கூடாது. ஊழல் நடந்திருந்தால் அதை ஆதாரத்துடன் வெளியிட்டு குற்றம் சாட்டினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்கள். இந்த நிலையில் நேற்று கமல் தனது டுவிட்டர் மூலம் முதல் ஊழல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். தன்னை

ரஜினி - கமல் நட்பு தொடர்கிறதா - ஒரு நட்பலசல்

ஆந்திராவில் சினிமா, அரசியல் இரண்டிலும் கோலோச்சியவர் என்.டி.ராமாராவ். அவர் பெயரிலான விருதுகளை அந்த மாநில அரசு ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான அந்த விருதை  ரஜினி, கமல் இருவருக்கும் தரப்போவதாக அறிவித்திருக்கிறார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. தமிழ்த் திரைப்பட துறையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிவரும் ரஜினி – கமல் இருவருடைய நட்பு, 1975-ல் வெளிவந்த ‘அபூர்வராகங்கள்’ படத்தில் தொடங்கியது. பிறகு இருவரும் ‘அவர்கள்’, ’நினைத்தாலே இனிக்கும்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ போன்ற பல படங்களில் இணைந்து நடித்தனர். சிங்கப்பூரில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படப்பிடிப்புக்காகச் சென்றபோது ‘இனிமேல் இணைந்து நடிப்பதில்லை, தனித்தனி

ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன்

ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான், கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இதில் அதிகப்படியாக விமர்சனங்களே இருந்து வருகிறது. குறிப்பாக கமலின் அரசியல் பிரவேச அறிவிப்பு பிறகு அவரது அனைத்து ட்விட்டர் கருத்துக்களும் கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும்.

மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்..!

திரைப்பட விழாவில் பங்கேற்க தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். Thank you Mamataji for inviting me again and again and honouring the best of my cinema family. I feel pride to part of this family. A great example of unity &diversity. Bon voyage for your London Trip. pic.twitter.com/meLYbZ0w8I — Kamal Haasan (@ikamalhaasan) November 10, 2017 மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று தொடங்கிய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 17-ம் தேதிவரை நடைபெறுகிறது.

’விமர்சனங்கள்தான் இந்தியாவை ஒளிரவைக்கும்’ -'மெர்சல்' பட எதிர்ப்பாளர்களுக்கு கமல் பதிலடி.

தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான ‘மெர்சல்’ படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக, தமிழக பா.ஜ.க-வினர் கடுமையாகக் குற்றம்சாட்டிவந்தனர். தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான ‘மெர்சல்’ படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக, தமிழக பா.ஜ.க-வினர் கடுமையாகக் குற்றம்சாட்டிவந்தனர். படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். பலர் பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர்