விஷாலுக்கு பிக்பாஸ் ஆதரவு தருகிறார்?… விரைவில் அறிவிப்பு

விஷாலுக்கு பிக்பாஸ் ஆதரவு தருகிறார்?... விரைவில் அறிவிப்பு

விஷாலுக்கும் கமலுக்கும் இடையே எவ்வித கருத்து மோதலும் இல்லை என்றும் இன்னும் ஓரிரு நாள்களில் கமல்ஹாசனே விஷாலை வெளிப்படையாக ஆதரிப்பார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது டுவிட்டர் பதிவுகளிலும் அரசியல் வாடை இருந்தது. எப்போதும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி டுவீட்டுகளை போட்ட வண்ணம் இருந்தார் கமல்.

 

முக்கிய பதவி

கமலும் விஷாலும் இணக்கமாகவே இருந்து வந்தனர். அதன் அடையாளமாக நடிகர் சங்க அறங்காவலர் குழுவில் கமலுக்கு கௌரவ பொறுப்பு கொடுத்தார் விஷால். கமலின் அரசியல் கட்சிக்கு விஷால் ஆதரவளிப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது. அரசியலில் ஆழம் பார்ப்பதற்காக முதலில் விஷாலை களமிறக்க கமல் திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டு வந்தது.

 

விஷால் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்து இறங்குவதாக விஷால் நேற்று அறிவித்தார். கமலுடன் ஏற்பட்ட பிரச்சினையால் விஷால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டது. கமல் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு ஆகிய இரண்டு படங்களிலும் நடிக்க வேண்டிய காட்சிகளில் கமல் நடித்துக் கொடுக்காததால் தயாரிப்பாளர்கள் விஷாலை அணுகினர்.

 

இதுதான் காரணமா

கமல்ஹாசனின் இந்தியன் 2 அறிவிப்பை பார்த்தவுடன் மேற்கண்ட இரு படங்களை முடித்து கொடுக்குமாறு கமலிடம் விஷால் கோரிக்கை வைத்தார். இதனால் இருவருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டதாக பேச்சு அடிபடுகிறது

 

கமல் ஆதரவுடன் விஷால்

கமல்ஹாசனுக்கும் விஷாலுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது. இது முழுவதும் பொலிட்டிக்கல் ஸ்டண்ட் என்று கூறப்படுகிறது. இன்னும் சில நாள்களில் நடிகர் கமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு தருவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எது எப்படியோ விஷாலை வைத்து கமல் ஆழம் பார்ப்பதாகவே காணப்படுகிறது.

 

Source: oneindia.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *