வல்லாரை வஸ்துக்களை உட்கொண்டாவது அரசியல் நிகழ்வுகளை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் : கமல்ஹாசன்

வல்லாரை வஸ்துக்களை உட்கொண்டாவது அரசியல் நிகழ்வுகளை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் : கமல்ஹாசன்

அரசியல் கட்சியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பயம் காரணமல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வல்லாரை வஸ்துக்களை உட்கொண்டாவது அரசியல் நிகழ்வுகளை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆனந்த விகடன் இதழில் கமல்ஹாசன் எழுதியுள்ள கட்டுரையில், வழக்கமான பாரம்பரியத்தில் வரும் அரசியல்வாதியாகத் தொடர தனக்கு விருப்பம் இல்லை என்றும், அப்படி ஒரு தலைமையின் கீழ் தொடர இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை‌ என குறிப்பிட்டுள்ளார். அரசியல் பயணத்திற்கு நான் தாமதப்படுத்துவது சந்தேகத்தினாலோ, பயத்தினாலோ அல்ல என்றும் சிரத்தையினால் தான் என்றும் கமல் கூறியுள்ளார். கடலே ஆர்ப்பரித்தாலும் பாம்பன் பாலம் நிலைத்து நிற்கிறதல்லவா? அது மாதிரி கட்ட வேண்டும் , அதற்கு எத்தனை நாட்கள் என்பதை மக்களே புரிந்துகொள்வார்கள் என தெரிவித்துள்ளார். மறதிதான் மக்களை ஏமாற்றுபவர்களின் மூலதனம் என்று கூறியுள்ள கமல்ஹாசன், வல்லாரை வஸ்துக்களை சாப்பிட்டாவது அரசியல் நிகழ்வுகளை நினைவில் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கழுத்தளவு தண்ணீரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களே டிசம்பர் மழையை மறந்துவிட்டார்களே என்றும்,கடந்த ஆண்டில் ஏகப்பட்ட மாற்றங்கள், மல்லுக்கட்டுகள் இருந்தன என்றும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், செய்திகளைப் பொழுதுபோக்காகக் கடந்துவிடாமல், அதன்பின் உள்ள அரசியலைப் பகுத்தறியப் பழகுங்கள் என்று கூறியுள்ளார்.

வீடியோ


source : puthiyathalaimurai.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *