கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை பிப்ரவரி 21 அன்று அறிவிக்கிறார்.

கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை பிப்ரவரி 21 அன்று  அறிவிக்கிறார்.

பிப்ரவரி 21 ம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அதே நாளில் மாநில அளவில் சுற்றுப்பயணத்தை ஆரம்பிப்பார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை தான் பிறந்த ரநாதபுரத்தில் இருந்து பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட சுற்று பயணத்தில், மதுரை, ராமநாதபுரம் திண்டுக்கல், சிவகங்கை மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்

மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சி கழகமோ அல்ல. புரிதலுக்கு என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில், பிப்ரவரி 21 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து, அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிந்துள்ளார்.

தலைவன் என்பவன், வழி நடத்த மாத்திரம் அன்று, பின்பற்றுபவனாக இருத்தல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் கைகோத்து இந்த தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும் என்றும்.  அதுவா ஜனநாயகம், அந்த நாயகர்களை சந்திக்கவே செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆதரவோடு பயணத்தை தொடங்குவதாக கூறியுள்ள கமல்ஹாசன், காலத்தில் சந்திப்போம் என தெரிந்தார்.

 

வீடியோ

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *