’விமர்சனங்கள்தான் இந்தியாவை ஒளிரவைக்கும்’ -‘மெர்சல்’ பட எதிர்ப்பாளர்களுக்கு கமல் பதிலடி.

தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான ‘மெர்சல்’ படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக, தமிழக பா.ஜ.க-வினர் கடுமையாகக் குற்றம்சாட்டிவந்தனர்.

Img Source : Vikatan

படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். பலர் பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல், ‘மெர்சல்’ பட சர்ச்சைகுறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

அதில், “ஒரு படைப்பை இருமுறை சென்சார் செய்யாதீர்கள். ‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. விமர்சனங்களைத் தெளிவான புரிதலுடன்கூடிய விளக்கங்களால் எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை வாயடைக்கச் செய்யாதீர்கள்.  விமர்சனங்கள்தான் இந்தியாவை ஒளிரவைக்கும்” என ‘மெர்சல்’ படத்தை எதிர்ப்பவர்களுக்குப் பதிலடிகொடுத்துள்ளார், கமல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Source: vikatan

Kamal Haasan’s Tweet

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *