ஹார்வர்டு பல்கலை., கருத்தரங்கில் கமல் உரை!

ஹார்வர்டு பல்கலை., கருத்தரங்கில் கமல் உரை!

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழக கருத்தரங்கில் நடிகர் கமல் பேசப்போகிறார்.

உலக அளவில் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம். இங்கு ஆண்டுதோறும் இந்திய கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. 15வது ஆண்டாக நடைபெற இருக்கும் கருத்தரங்கம் பிப்ரவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடக்கிறது.

இதில் பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சருமான சுரேஷ் பிரபு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதல்வருமான அமரீந்தர் சிங் ஆகியோருடன் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் வளர்ச்சி, சவால்கள் ஆகியவை பற்றி இந்நிகழ்வில் பேசப்படும். தொடர்ந்து பார்வையாளர்களுடன் உரையாடல் நடக்கும்.

source : samayam.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *