அரசியலில் எந்த கட்சியும் தீண்டத்தகாதது இல்லை… மக்கள் நலன் கருதி கூட்டணி: கமல்ஹாசன்

அரசியலில் எந்த கட்சியும் தீண்டத்தகாதது இல்லை... மக்கள் நலன் கருதி கூட்டணி: கமல்ஹாசன்

தமது கட்சியின் பெயர், கொள்கைகளை விரைவில் வெளியிடுவேன்; அரசியலில் தீண்டத்தகாதவர் யாரும் இல்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் நேற்று பேசியதாவது: விரைவில் என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் வெளியிடுவேன். சித்தாந்தங்களின் அடிப்படையின் பாஜக மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்.

என்னைப் பொறுத்தவரையில் மக்களுக்கு எது தேவையோ அதுவே என்னுடைய தேவை. ஆகையால் தமிழகத்தின் நலன் கருதி வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. எனக்கு அரசியலுக்கு வருகின்றன தைரியம் இருக்கிறது. எனக்கு எந்த ஒரு பயமும் இல்லை. தமிழக அரசியலில் நான் என்னை முன்னிறுத்தவில்லை. அதற்கு பதிலாக மாற்றத்தை முன்னிறுத்துகிறேன். மாற்றத்தை விரும்புகிறவர்கள் நிச்சயம் என்னை ஆதரிப்பார்கள். எந்த வகையிலான தீவிரவாதமானாலும் அதை நிச்சயம் ஆதரிக்கப் போவதில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

 

Source: oneindia.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *