ரஜினியின் அரசியல் மௌனம்; சேலத்தில் ரசிகர் தற்கொலை முயற்சி

ரஜினியின் அரசியல் மௌனம்; சேலத்தில் ரசிகர் தற்கொலை முயற்சி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக தொடர்ந்து மௌனம் காத்து வருவதன் விளைவாக அவரது ரசிகர் ஒருவர் சேலத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா உயிாிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் வெளிப்படையாக அரசியல் பேசத் தொடங்கியுள்ளனா். மேலும் பல்வேறு திரை பிரபலங்களும் அரசை வெளிப்படையாக குறைகூறத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், நடிகா் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னா் ரசிகா்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பொிய அளவிலான சலசலப்பை ஏற்படுத்தியது.

15 மாவட்ட ரசிகா்களை அழைத்து அவா்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். இந்நிலையில் இரண்டாம் கட்ட ரசிகா்கள் சந்திப்பை ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளாா். அதன்படி வருகிற 26ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை ரசிகா்களை சந்தித்து அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறாா்.

இந்நிலையில், அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? என்று வெளிப்படையாக தொவிக்காமல், புயல் வரும்போது பாா்த்துக் கொள்ளலாம் என்று எந்த பக்கமும் சிக்னல் காட்டாமல் அனைவரையும் குழப்பத்திலேயே நகா்த்திக் கொண்டிருக்கிறாா்.

இதன் விளைவாக அவரது ரசிகர் ஒருவர் சேலம் மாவட்டத்தில் இன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அரசியல் மௌனத்தால் தற்கொலைக்கு முயன்ற 42 வயது மதிக்கத்தக்க நபா் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக சேலம் மோகன் குமாரமங்களம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *