கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் பேச்சு

கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் பேச்சு

பிட்சா, பர்க்கர், மற்றும் குளிர்பானங்களை பயன்படுத்தக் கூடாது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவையின் பெருமை, புகழ், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றும் வகையில் கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து 10 ஆவது ஆண்டாக ‘கோவை விழா’ என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்நிகழ்ச்சி வருகிற 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . ‘கோவை விழா’வின் ஒரு பகுதியாக தனியார் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள, பள்ளிகளில் குழந்தை உடல் பருமன் தடுப்பு திட்ட துவக்க விழா வ.உ.சி.மைதானத்தில் துவங்கியது. இந்தத் திட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “ பிட்சா, பர்க்கர், மற்றும் குளிர்பானங்களை பயன்படுத்தக் கூடாது. நான் இவ்வாறு பேசுவதால், அதன் சார்ந்த நிறுவனங்கள் கோபம் அடைய வாய்ப்புள்ளது. பரவாயில்லை. யாராவது ஒருவர் நல்லதை கூறியாக வேண்டும். இளநீர், பழச்சாறுகள் உட்கொள்ள வேண்டும்.”என்றவர்  “ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியான விஷயம்தான்” என தெரிவித்தார்.

வீடியோ


source: vikatan.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *