திராவிட சிந்தனை என்றல் என்ன ? : கமல் ஹாசன்

திராவிட சிந்தனை என்றல் என்ன ? : கமல் ஹாசன்

முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜே.அப்துல் கலாம் அய்யா அவர்களின் இல்லத்தில் இருந்து பிப்ரவரி 21 ம் தேதி கமல் ஹாசன் அரசியல் பயணம் தொடங்க முடிவு.

தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரையில், தமிழ் நாடு போன்ற வளர்த்த மாநிலங்கள், ஏனைய பின்தங்கிய வட இந்தியா மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் ‘திராவிட’ சிந்தனை இந்திய முழுவதுமானது என்று, தனது கருத்தை தெரிவித்துஉள்ளர்.

இந்தியா ஒரு கூட்டுக்குடும்பம்

இந்தியாடவில் அதிக வரி செலுத்தும் மாநிலங்களான மராட்டியம் மற்றும் தமிழகம் அதற்குஉண்டான பலன்களை முழுமையாக பெறுவதில்லை என்றும், இந்த நிதி மற்ற வட மாநிலங்களுக்கு செல்வதாக சிலர் கருதுகின்றனர், ஆனால் ஒரு குடுகும்பத்தின் செயல்பாடு இவ்வண்ணமே நிகழும் என்று கமல் ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு குப்பத்தில் மூத்த உறுப்பினர் வருமானமற்ற ஏனைய உடன்பிறப்புகளுக்கு கொடுத்து உதவ வேண்டும், மூத்த உறுப்பினர் என்ற ஒரே காரணதிக்காக அனைத்தையும் கொடுத்துவிட்டு அவர் பசியால் வாடுவது நியாயம் அற்றது என்றும், இதுவே சமீப காலமாக நடத்துவருவதை போல் தான் உணர்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தை போன்ற மாநிலங்களை நிதி கமிஷன் புறக்கணிக்கிறது என்ற முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் கருத்தையும் நினைவு கூர்ந்தார்.

திராவிட சிந்தனை

திராவிட சிந்தனை என்பது அனைத்து இந்தியாவிக்குமானது என்றும், சிலர் திராவிடம் என்பதே ஒரு கெட்ட வார்த்தை போலவும், மற்றும் சிலர் அரசியலை தவிர வேரோரு பயனும் அதனால் இல்லை என்றும் நினைக்கின்றனர், இவரெண்டும் தவறு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தென் இந்தியா மாநிலங்கள் அணைத்து திராவிடம் என்ற ஓர் சிந்தனையில் செயல்படவேண்டும், சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), கே.சந்திரசேகர ராவ் (தெலுங்கானா), சித்தாரமையா (கர்நாடகா) மற்றும் பினாரி விஜயன் (கேரளா) ஆகியோரின் ஒத்தகுரலில் செயல்பட்டால், அது கண்டிப்பாக டெல்லியில் எதிரொலிக்கும். தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டுமே திராவிடர்கள் இல்லை, பிற மொழி பேசுபவர்களும் திராவிடர்கள் தான் இந்த சிந்தனை வேர் எடுக்க வேண்டும். இது என் விருப்பம் “என்று திரு ஹாசன் கூறினார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *