மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் – கமல் ஹாசன்

மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் - கமல் ஹாசன்

மாணவர்கள் சமூக உணர்வோடு செயல்பட வேண்டும்

தமிழகத்தின், தற்போதைய அரசியல் செலயல்பாடுகளை சீர் திருத்த மாணவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரவேண்டும்! என்று நடிகர் கமல் ஹாசன், சாய் ராம் பொறியியல் கல்லுரியில் (Sri Sairam Engineering College) நேற்று நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

‘மாற்றம் பவுண்டேசன் (Maatram Foundation, an NGO.) , ஏற்பாடு செய்த ‘சங்கமம் 2.0’ (Sangamam 2.0’,) என்ற மூன்றுநாள் நிகழ்ச்சியில், கல்ஹாசன் மாணவர்களுடன் உரையாடினார்.

மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள் என்றும், மாணவர்கள் அரசியலில் இறங்கும் நேரம் வந்துவிட்டது என்று கமல் ஹாசன் தெரிவித்தார், மேலும் கூறுகையில்.. மாணவர்கள் “கேலி அரசியல் விமர்சனங்களுடன்” நிறுத்திக்கொள்ளாமல், நட்டு முன்னேற்றத்திற்காக நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில், மாணவர்கள் தன் சுற்றத்தில் நடக்கும் அனைத்தையும் விழிப்புணர்வுடன் உற்று நோக்க வேண்டும் (Being Vigilant) என்றும், சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் உற்று நோக்கினால், அரசியல் மற்றும் சமூக மாற்றம் தானாக நிகழும் என்று தெரிவித்தார்.

 

மனவர்களுடனான கலந்துரையாடல், கேள்வி பதில் [Q&A]:

கேள்வி 1: உங்கள் இருக்கை உங்களை வரையறுக்காது, ஆனால் நீங்கள் உங்கள் நிலையை வரையறுக்க முடியும். என்று தங்கள் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததிலிருந்து மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டியது என்ன ?

 

 

பதில் 1: (அந்த மாணவரை நோக்கி)  நீஙகள் அமர்ந்திருக்கும் இந்த அரங்கத்தின் இருகை, ஒருபொழுதும் உங்களை பிரதிபலிக்கவோ அல்லது வரையறுக்கவோ முடியாது, இது வெறும் இருகை மட்டுமே.

ஆனால், நீங்கள் இப்பொழுது எழுப்பிய அர்த்தமுள்ள கேள்வி உங்களை வரையறுக்கிறது, அதனால் உங்கள் மூலம் உங்கள் இருக்கையும் வரையறுக்க படுகிறது. நன்றி!

கேள்வி 2: உங்களுக்கு மிகவும் பிடித்த தலைவர்கள் யார், அவர்களிடம் பிடித்த பண்புகள் என்ன ?

பதில் 2: அரசியல் மாற்றங்களை அந்த காலங்களில் போர் ஏற்படுத்தியிருக்கலாம்,

அனல் எந்த சேதகளும் இல்லாமல் அத மாற்றத்தை நிகழ்த்தி கட்டியவர்களில் முதன்மையானவர் திரு.மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவரகள்.

மற்றும், அவருக்கு நேரெதிராக நின்று விமர்சனக்கலை வெய்த திரு.அம்பேத்கர் அவர்களும் எனக்கு மிகவும் பிடித்த தலைவர்.

காந்தி அவர்களின் தொண்டனாக மற்றும் பக்தனாக இருந்த திரு. காமராஜர் அவர்களும் எனக்கு மிகவம் பிடித்த தலைவர். மாபெரும் சமூகமற்றதை ஏற்படுத்தி, ஓட்டு அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடாது. வெளியில் இருந்தே சமுகத்தை செதுக்கிய திரு.தந்தை பெரியார் அவர்களும் எனக்கு பிடித்த தலைவர்.

திரைப்பட நடிகர் என்று பிறர் விமர்சனங்களை புறம் தள்ளி, பாமர மக்களின் கனவுகளுடன் வந்து, அக் கனவுகளை நிறைவேற்றி காண்பித்த திரு MGR அவர்களும் எனக்கு பிடித்த தலைவர்……

கேள்வி 3: தமிழ் நாடு மற்றும் இந்தியாவிற்கான உங்கள் திட்டம் என்ன ?

பதில் 3: (அந்த மாணவரை நோக்கி) முன்னேற்றத்திற்கான உங்கள் திட்டம் என்ன என்று கூறுங்கள், அதை நான் வெளிப்படையாக பின்பற்றுகிறேன், இதுவே என் திட்டம்.

இந்தியா அல்லது தமிழ் நாட்டின் வளச்சிக்கான எந்த ஒரு நல்ல யோசனையையும் கருத்தில் கொள்வோம். நாம் தமிழ் நாட்டை சுத்தமாகவும், சரியாகவும் பார்துகொடோம் என்றல் இந்தியா தன்னால் சரியாகிவிடும்.

என் பார்வை மிகவும் எளிமையானது, கல்வி அறிவு மிகவும் முக்கியமானது, நீங்கள் (மாணவர்கள்) அனைவரும் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பிற்காக பெருமைகொள்ள வேண்டும்.

அனைத்து அரசியல் வாதிகளும் வறுமையை ஒழிப்போம் என்று “அரைத்த மாவை அரைத்துக்கொடு” இருக்கிறார்கள். ஆம் அவர்கள் கூறியது போல வறுமையை ஒழித்து விட்டார்கள், தங்கள் சொந்த வறுமையை மட்டும் ஒழித்து ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ளனர்!

நமக்கு தலைவர்கள் இனி தேவையில்லை, நீங்கள் ஒவொருவரும் தலைவர்கள். உங்கள் பணி நாட்டை வழிநடத்த ஒரு அதிகாரியை தேந்தெடுப்பது மட்டும்தான். அவர் சரியாக செயல்படாவிட்டால், ஐந்துஆண்டுகள் காத்து இருக்காமல் அவரை வீட்டிற்கு அனுப்பும் அதிகாரம் உங்களிடம் உள்ளது.

இதை தான், விழிப்புடன் இருப்பது (being vigilant) அவசியம் என்று பல மேடைகளில் அறிவுறுத்தி வருகிறேன்.

 

கேள்வி 4: தற்போதைய சூழ்நிலையில், தூய்மையன வாழ்க்கை (incorruptible) என்பது சாத்தியமா ?

பதில் 4: ஊழல் அற்ற வாழ்கை என்பது, உழலுக்கான வாய்ப்புகள் நம்மை தேடிவருபோது, சபலப்படாமல் அதை தவிப்பதே ஆகும். நன் என்வாழ்வில் பலமுரை இதை போன்ற ஊழல் வாய்ப்புகளை தவிர்த்துள்ளேன்.

இக் காலசூழலில் நேர்மையான வாழ்கை என்பது புத்திசாலிதமற்ற கொள்கையை போல தோன்றலாம், ஆனால் உண்மையில் அது ஒரு சொகுசான வாழ்க்கை. வெகு சிலரால்தான் இதை ஆண்மையுடன் பெற முடியும், இது வசதி வாய்ப்புகளுக்கு அப்பாற் பட்டது.

நேர்மை என்ற சொகுசான வாழ்க்கையை, இந்தியாவில் அனைவரும் பெறமுடியும். அதற்கு அதை பெறவேண்டும் என்ற எண்ணம் மற்றும் சில தியாகங்களை செய்யவேண்டும்.

என்னால் முடிந்த தியங்களை நன் செய்து வருகிறேன், மாணவர்களான நீங்களும் செய்யவேண்டும் என்று விருபுகிறேன்.
நேர்மையான வாழ்க்கை சாத்தியமா, என்ற கேள்வி இனி உங்கள் முன் அலச கூடாது!

நேர்மையான வாழ்கை சாத்தியமே!

கேள்வி 5:ஏன் உங்கள் எழுத்துக்களும் எண்ணங்களும் எப்பொழுதும் சர்ச்சைக்கு வழி வகுக்கிறது ? 

பதில் 5: 

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *