மக்கள் உயிரை மதியாத அரசு; விரைவில் பல்லக்கில் இருந்து வீழ்த்தப்படும்; கோபத்துடன் கமல்!

மக்கள் உயிரை மதியாத அரசு; விரைவில் பல்லக்கில் இருந்து வீழ்த்தப்படும்; கோபத்துடன் கமல்!

சென்னை: மக்கள் உயிர்களைப் பற்றி கவலைப்படாமல், புகழுக்காக ஏங்கி செயல்படும் அரசு விரைவில் வீழ்த்தப்படும் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில், வரும் டிசம்பர் 3ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளுங்கட்சியினர் செயல்பட்டுள்ளனர்.

அதாவது உயிருள்ள அரசியல்வாதிகள் படத்துடன் வ.உ.சி பூங்கா முதல், விமான நிலையம் வரை தொடர்ச்சியாக கட் அவுட், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரங்கசாமி கவுண்டன் புதூரைச் சேர்ந்த ரகுபதி, சிங்கா நல்லூர் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அலங்கார வளைவு மோதி, ரகு கீழே விழுந்தார்.

அவர் எழுவதற்குள், எதிரே வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே ரகு உயிரிழந்தார். இதையடுத்து அவசர அவசரமாக அலங்கார வளைவு நீக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது.

விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner”ஜி”க்கள் உணரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Source: samayam

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *